வியாழன், 25 மே, 2017

தைரியமாக சொல் நீ மனிதன் தானா...?

ஏதாச்சும் போதை உன்னை இப்போதும் தேவை கண்ணா - இல்லாட்டி மனுஷனுக்கு சக்தி இல்லே...(!) / தாய்ப் பாலும் போதை தரும்... சாராயம் போதை தரும் - ரெண்டையும் பிரித்தெறிய புத்தி இல்லே... / தாய்ப் பாலு போதை சில மாதம் மட்டும்...(?) சாராய போதை நாம் வாழும் மட்டும்...(!) / போதை மாறலாம் புத்தி மாறுமா...? புத்தர் சொல்லியும் நாய் வாலு நிமிறுமா...? / ஏல மச்சி மச்சி... தல சுத்தி சுத்தி... உன் புத்தி கெட்டு போயாச்சு... / என் மூளைக்குள்ள பல பட்டாம்பூச்சி - எட்டி எட்டிப் பார்த்தது என்னாச்சு...?! (திரைப்படம் : அன்பே சிவம் / பாடல் வரிகள் : கவிஞர் வைரமுத்து)

புதன், 17 மே, 2017

பாடல் வரிகளை சொல்வது உங்கள் பொறுப்பு...!

"எப்படியெல்லாம் வாழக்கூடாதோ அப்படியெல்லாம் வாழ்ந்திருக்கிறேன். ஆகவே இப்படித்தான் வாழவேண்டும் என்று சொல்லும் யோக்கிதை எனக்குண்டு" கவிஞர் கண்ணதாசன்
குடிமகனிடம் ஒரு உரையாடல்

திங்கள், 10 ஏப்ரல், 2017

பாதுகாப்பு முக்கியம்...!

வணக்கம் வலைப்பதிவு நண்பர்களே... "இது தேவை, அது தேவை"-ன்னு பலதையும் சேமிக்கிறோம்... பிறகு மறந்தும் போறோம்... ஏன்னா பயன்தராததை சேமிக்கிற பழக்கத்தினாலே...! சரி இது ஒருபுறம் இருக்கட்டும், சேமிக்கிறது அவசியம் தான்... ஆனா பாதுகாப்பு முக்கியம் அல்லவா...? அடியேன் சொல்ல வர்றது என்னென்னா :- இது ஒரு முக்கியமான தொழிற்நுட்ப பதிவு...! (சிந்தனை பதிவுகள் எல்லாம் பிறகு வரும்...!) முந்தைய →சேமிப்பு அவசியம்← பதிவில் சொன்னது போல் வலைப்பக்கம் (blogs) உட்பட பல முக்கிய கோப்புகளை (documents) ஒரே ஒரு (Gmail) மின்னஞ்சல் மூலம் பயன்படுத்துகிறோம்... அதனை எவ்வாறு பாதுகாப்பது என்பது பற்றிய பதிவு தான் இது...

திங்கள், 13 மார்ச், 2017

பூட்டு

அடக்கமில்லாமே சபையிலே ஏறி அளந்து கொட்டும் - அண்ணன்களுக்கு வாயிலே பூட்டு... அடுத்தவர் பையில் இருப்பதை கையில் அள்ளிக் கொள்ளும் - திருடருக்கு கையிலே பூட்டு... புத்தி கெட்டு, சக்தி கெட்டு, பொழைப்பை எல்லாம் விட்டுவிட்டு - சுற்றி வரும் சோம்பேறிக்கு காலிலே பூட்டு(2) பலப்பல பலப்பல பல ரகமா இருக்குது பூட்டு... அது பல விதமா மனிதர்களை பூட்டுது போட்டு... கல கலவெனும் பகுத்தறிவு சாவிய போட்டு... நான் கச்சிதமா திறந்து வைப்பேன் இதயத்தை காட்டு...! மங்கையர் பின்னாலே லைசென்சு இல்லாமே - வளைய வரும் காமுகர்க்கு கண்ணிலே பூட்டு... அங்குமில்லாமே இங்குமில்லாமே - அலைந்து வரும் மூடருக்கு மனசுல பூட்டு.. உறக்கம் கெட்டு, வழக்கம் கெட்டு, ஊரு வம்ப கேட்டுக்கிட்டு - உள்ளம் கெட்ட மனுசருக்கு காதிலே பூட்டு... (திரைப்படம் : ஆனந்தஜோதி / பாடல் வரிகள் : கவிஞர் கண்ணதாசன்)ஆனா இந்த வலைப்பூட்டுக்கு சாவியில்லைன்னு இனிய நண்பர் திரு. ராஜாராம் →(நீச்சல்காரன் வலைத்தளம்)← அவர்கள் சொல்கிறார்... இந்தப் பதிவிற்கு காரணமான அவருக்கு முதலில் நன்றி... அவரின் பூட்டு செயலியை கீழே இணைத்துள்ளேன்... பயன்படுத்தும் முறையை வாசித்து விட்டு, இந்த செயலியை நீங்கள் பயன்படுத்தி விட்டால், உங்கள் பதிவை யாரும் திருடவே முடியாது என்று பொய் சொல்ல மாட்டேன்... அன்பர்கள் உங்கள் எழுத்துக்களை தட்டச்சு செய்து திருட முடியும் (!) என்கிற உண்மையையும் சொல்லிக் கொள்கிறேன்... இதோ விளக்கமாக :